Claim

மங்கள சமரவீர
ஐக்கிய தேசியக் கட்சி
சிகரட் விற்பனை குறைவடைந்ததால் அரசாங்கத்திற்கு 1,800 கோடி (ரூ.18 பில்லியன்) வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.
லங்காதீப: 12 Sep 2018
Statement
சிகரட் விற்பனை குறைவடைந்ததால் அரசாங்கத்திற்கு 1,800 கோடி (ரூ.18 பில்லியன்) வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.
Fact check
சிகரட் விற்பனை குறைவடைந்ததால் சிகரட் மூலம் கிடைக்கும் வரி வருமானம் ரூ.18 பில்லியனால் குறைந்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்திருந்தார். அவரின் கூற்று தவறானது என தரவூகள் நிரூபிக்கின்றன.
செப்டெம்பர் 11 ஆம் திகதி அமைச்சரவை சந்திப்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்திருந்தார். சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட அவரது கூற்று: “சிகரட் விற்பனை குறைவடைந்ததால் 1,800 கோடி (ரூ.18 பில்லியன்) வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்ற வரித்திருத்தத்தில் குறிப்பிடத்தக்க எந்த திருத்தமும் இடம்பெறாத காரணத்தினால், 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற வரி திருத்தத்தினையே அவர் குறிப்பிட்டுள்ளார் என கருதமுடியூம்.
வரிவிலை திருத்தங்கள் தொடர்பான விபரங்கள்:
இந்த திருத்தத்தில் இரண்டு விதமான வரிகள் விதிக்கப்பட்டன. முதலாவதாக 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து தீர்வை வரி அதிகரிக்கப்பட்டது. இரண்டாவதாக 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், முன்னதாக நீக்கப்பட்டிருந்த மதிப்பு சேர் வரி (VAT) 'மீண்டும் விதிக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை புகையிலை நிறுவனம் சிகரட்டின் விலையை மொத்த வரி அதிகரிப்புக்கு மேலாக உயர்த்தியது. இதற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை புகையிலை நிறுவனம் சிகரட்டின் விலையை மொத்த வரி அதிகரிப்புக்கு மேலாக உயர்த்தியது.
Fact Check:
சிகரட்டின் விலை அதிகரிப்பு அதன் விற்பனையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதன் காரணமாக அமைச்சர் குறிப்பிடுவதைப் போன்று 18 பில்லியன் ரூபா வரி இழப்பு ஏற்பட்டதா?
அமைச்சரின் கூற்றின் உண்மைத்தன்மையை 2017 ஆம் ஆண்டின் சிகரட் விற்பனை மற்றும் வரி வருமானத்தை 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுவதன் மூலம் கண்டறிய முடியும். இந்த ஒப்பீடு அட்டவணை 1 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிகரெட் விற்பனை: வரி மற்றும் விலைத்திருத்தத்திற்கு பின்னர் சிகரட் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கு இடையில், சிகரட் விற்பனையானது 3.79 பில்லியனில் இருந்து 3.15 பில்லியனாக குறைவடைந்துள்ளது. இது 0.64 பில்லியன் அல்லது 16.9 வீத வீழ்ச்சியாகும்.
வரி வருமானம்: வரித்திருத்தத்திற்கு பின்னர் வரி வருமானத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கு இடையில், வரி வருமானம் ரூ.89.7 பில்லியனில் இருந்து ரூ107.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது 17.7 பில்லியன் ரூபா அதிகரிப்பாகும். (வரியினால் வருமானம் அதிகரித்துள்ளது என்பதனை உண்மையில் இந்த ஒப்பீடு குறைத்தே மதிப்பிடுகின்றது. ஏனென்றால் நவம்பர் முதலாம் திகதி வரி அதிகரிக்கப்பட்டதனால் 2016 ஆம் ஆண்டின் இறுதி இரண்டு மாதங்களில் வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.)
2016 ஆம் ஆண்டில் வரி மற்றும் விலை அதிகரிக்கப்பட்டதனால் சிகரட் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்ட போதும், வரி வருமானம் ரூ.18 பில்லியனால் அதிகரித்துள்ளது. மாறாக அமைச்சர் தெரிவித்ததைப் போன்று வரி வருமானம் ரூ.18 பில்லியனால் குறைவடையவில்லை.
முடிவூ:
அமைச்சரினால் தெரிவிக்கப்பட்ட கருத்து உண்மையான தரவுகளுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் மாறாக உள்ளது. எனவே இந்த கூற்று முற்றிலும் தவறானது என வகைப்படுத்தப்படுகின்றது.
*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: 2015 முதல் 2017 ஆம் ஆண்டு வரை வரி வருமானம் மற்றும் சிகரட் விற்பனை ஒப்பீடு